• Breaking News

    ராமேஸ்வரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

     

    கோப்பு படம்

    இலங்கை பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்தடைந்தார்.அவரை கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்திரராஜன்,பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வரவேற்றனர்.இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரை இலங்கை அதிகாரிகள் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

    ராம நவமி நாளான இன்று, நண்பகல் 12 மணியளவில், ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    No comments