தென்காசி: நியாய விலை கடைகளில் இணையத்தில் கைரேகை பதிவு செய்ய காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி


தென்காசி மாவட்டத்தில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இணையதளம் சேவை சரியாக செயல்படாததால்  பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றார்கள்.சில வாரங்களாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் இணையதள சேவை சரிவர கிடைக்காததால் கைரேகை பதிவு செய்வது காலதாமதம் ஆகிறது.

தற்போது வெயில் காலம் என்பதால் நியாய விலை கடை செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.நியாய விலை கடையில் கைரேகை பதிவு செய்வதற்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரை ஆகிறது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

மாவட்ட வட்ட வழங்கல் துறை உடனடியாக இணையதள சேவை தடங்கல் இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments