• Breaking News

    பஹல்காம் தாக்குதல்..... இந்திய சுற்றுப்பயணம் பாதியில் ரத்து..... அமெரிக்கா புறப்பட்டார் துணை அதிபர் ஜேடி வான்ஸ்

     


    அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தன்னுடைய குடும்பத்துடன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார். அவர் கடந்த 21ஆம் தேதி வந்திருந்த நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார். நேற்று தாஜ்மஹாலை சுற்றி பார்த்த அவர் பின்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல சிறப்பு வாய்ந்த பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார்.

    இதேபோன்று இந்திய பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையை பார்வையிடுவதாக இருந்தார். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்ததால் அவர் ஒரு தன்னுடைய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு இன்று காலை 6.30 மணியளவில் அமெரிக்காவிற்கு விமானத்தில் குடும்பத்துடன் சென்றுவிட்டார்.

    காஷ்மீரில் நடந்த அந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் இன்னும் பதற்றமான சூழல் நிலவுவதோடு உத்திரபிரதேச உட்பட பல பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஜேடிவான்ஸ் இந்திய சுற்றுப்பயணத்தை திடீரென முடித்துக் கொண்டு பாதியில் அமெரிக்கா கிளம்பியது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்த உள்ளது என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    No comments