தென்காசி காசிவிசுவநாதர் சுவாமி கோவில் கும்பாபிசேகம் கோலாகலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தென்காசி உலகம்பாள் சமேத காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிசேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென்காசியில் அமைந்துள்ள உலகம்பாள் சமேத காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிசேக விழா கடந்த 3ந் தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று முன் தினம் (ஞாயிறு)அதிகாலை 3 மணிக்கு விக்னேஸ் வர பூஜை, புண்யாக வாசனம், 4ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு நாடி சந்தானம், ஸ்பர்ஸா ஹ_தி, திரவ்யாஹ{தியும், 7 மணிக்கு மகா பூர் ணாஹ}தி, யாத்ராதா வம், கடம் எழுந்தளல் நடைபெறுகிறது. தொடர்ந்து 5ம் கால பூஜை நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான நேற்று (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு மேல், உலகம்பாள் உடனுறை காசிவிஸ்வநாதசுவாமி ராஜகோபுரங்கள். விமான கோபுரங்கள். மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மகாபிஷேகம், தீபா ராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர வேதசிவாகம் வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் (எ) கல்யாணசுந்தர சிவாச் சாரியார் நடத்தி வைத்தார்.இதையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். டிரோன் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மேலும் கும்பாபிசேகத்தை காண பல இடங்களில் எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கும்பாபிசேகத்தையொட்டி தென்காசியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தென்காசி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி தலைவர் சாதிர் அறிவுத்தலின் பேரில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தெப்பக்குளம் பகுதியில் காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments