பல்லாவரம்: ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் இந்தியன் நேஷனல் டேலண்ட் ரிசர்ச் ஓலிம்பியாட் பாராட்டு விழா
சென்னை அடுத்த பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் இந்தியன் நேஷனல் டேலண்ட் ரிசர்ச் ஓலிம்பியாட் பாராட்டு விழா ஏ.ஜி.எம் சைதன்யா நமலா தலைமையில் கேக் வெட்டி வெகுவிமர்சியாக கொண்டாடபட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியரும், பள்ளி கல்வி தலைவருமான டாக்டர் கிரிஜா, தமிழ்நாடு மாநில தலைமை இயக்குநர் ஹரிபாபு ஜம்பானி கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி மற்றும் லேப்டாப் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பல்லாவரம், பல்லாவரம் ரேடியக் சாலை, பாலவாக்கம், ராயபுரம் மற்றும் சேலையூர் கிளைகளில் இருந்து தேர்ந்தெடுக்கபட்ட மாணவர்களின் சாதனைகளை பாராட்டு வகையில் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆசிரிய பெருமக்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளியின் முதல்வர் பேசுகையில்:
தேசிய அளவில் 7 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர் இதில் முதல் சுற்றில் 1 லட்சம் மாணவர்களும் இரண்டாவது சுற்றில் தமிழகத்தில் உள்ள சைத்தன்யா பள்ளியில் 8, 500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் பல்லாவரத்தில் 29 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி, லேப்டாப் வழங்கியும் இதற்கு ஊக்கமளித்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
No comments