திருமணம் முடித்த உடனேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் வேறு விதமாகத்தான் பிறக்கும்..... திமுக எம்.பி சர்ச்சை பேச்சு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. எம்.பி. கல்யாணசுந்தரம், "அனைவருக்கும் எல்லாம் உடனே கிடைத்துவிடாது. திருமணம் ஆனால் கூட பத்து மாதம் பொறுத்து இருந்தால் தான் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடித்த உடனேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. வேறு விதமாகத்தான் பிறக்கும். முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் மட்டும் தான் திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும்.
எனவே ஆத்திரப்பட்டு கோபப்பட்டு திட்டி பேசுவதால் நல்ல விஷயங்கள் நடக்காது. அவர்களிடம் பேசுவது போல் பேசி அனுசரித்து தான் வேலை வாங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சால் ஏற்பட்ட அதிர்ச்சியே விலகாத நிலையில் தற்போது எம்.பி. கல்யாண சுந்தரத்தின் பேச்சு திமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
மக்கள் பிரதிநிதிகள் கண்ணியமாக பேச வேண்டுமென நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் தற்போது இவரது பேச்சால் சர்ச்சை எழுந்திருக்கிறது. மேலும் அவரது பேச்சை சமூக வலைதளங்களில் பகிர்ந்து எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
No comments