• Breaking News

    கும்மிடிப்பூண்டி: அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வு பணி...... முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பங்கேற்பு......


    திருவள்ளூர் அதிமுக.வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம்  தேர்வழி ஊராட்சி அடங்கிய  பூத் கமிட்டி கள ஆய்வு பணி கிளைக் கழக  செயலாளர்கள் வெங்கடேசன் குணசேகரன் சத்தியநாராயணன் மற்றும் எம் எஸ் எஸ் சரவணன் ஏற்பாட்டில் சாமி ரெட்டி கண்டிகை அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

      விளையாட்டு வீரர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கும் பணி திருவள்ளூர் அதிமுகவடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கழக செய்தி தொடர்பாளர் ஆன பொன்னையன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் இதில் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சியாமளா தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், எத்திராஜ் கும்மிடிப்பூண்டி பேருர் செயலாளர்  ரவி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இமயம் மனோஜ், ,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முல்லைவேந்தன், டேவிட் சுதாகர். தயாளன். ரமேஷ் கும்மிடிப்பூண்டி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜா, நாகராஜ்,   சுண்ணாம்பு குளம் கிளை கழக நிர்வாகிகள்.மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒன்றிய பாசறை நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    No comments