நாகை: வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மீது வாகனம் ஏறி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி


நாகை மாவட்டம் தெத்தி கிராமம் கீழத் தெருவை சேர்ந்த ராமவேணி வயது (65)  மதிக்கத்தக்க மூதாட்டி இவர் வழக்கம் போல  இரவு வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது நாகை மாவட்டம் சிக்கல் இருந்து தோஸ்த் என்ற நான்கு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த திருமண நிச்சயிக்கப்பட்ட பெண்ணை  பார்க்கச் வந்ததாக சொல்லப்படுகிறது.

 அப்போது  எதிர்பாராத விதமாக வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் மீது வாகனம் தலையில் ஏறி மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 கீழ்வேளூர் தாலுகா ரிப்போட்டர் த.கண்ணன்

Post a Comment

0 Comments