போக்சோ வழக்கில் லஞ்சம்..... பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமியை சமீபத்தில் 17 வயதுடைய சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதேபோல் சிறுமியின் உறவினர் ஒருவரும் அவரை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதுபற்றி சிறுமி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த சிறுவன், சிறுமியின் உறவினர் மற்றும் உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் ஆகிய 3 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 3 பேரை போலீசார் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட 3 பேரிடமும், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் லஞ்சம் கேட்டு பெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். இந்தநிலையில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி இருவரும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
No comments