சென்னை தெற்கு மாவட்டம், புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, *"முத்தமிழ் அறிஞரின் புதல்வர் இந்தியா போற்றும் முதல்வர்"* என்ற தலைப்பில் இசையரங்கம் நிகழ்ச்சி மற்றும் 2072 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை, கோவிலம்பாக்கம், காந்திநகர் போலீஸ் பூத் அருகில், புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் தலைமையில், 02.04.2025 புதன்கிழமை அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வை, சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சோழிங்கநல்லூர் மத்திய பகுதிகழகச் செயலாளருமான லயன் ச.அரவிந்த் ரமேஷ், ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதி ராஜன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் J.E.பாண்டியன் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். திமுக-வின், சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
ஒன்றிய குழு துணைத் தலைவர் B.பிரசாத், மாவட்ட கவுன்சிலர் N.வேதகிரி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் J.D.மனுநீதி, H.D.போஸ், சமாதானம் நல்லமுத்து, ஒன்றிய பொருளாளர் த.டில்லி பாபு, மாவட்ட பிரதிநிதிகள் கே.குமார், ஆர்,சொக்கலிங்கம், ஜி.எம்.ஏழுமலை ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
திரை இசைப் பாடகர்களின் இசையரங்கம் நிகழ்ச்சியை தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவில், 4வது வார்டு உறுப்பினர் கே.வி.விஜயகுமார் நன்றி உரையாற்றினார்.
இந்த நிகழ்வில், பகுதி கழகச் செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், புனித தோமையார் மலை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள், மாணவரணி துணை அமைப்பாளர்கள், கிளை கழகச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத்தினர் திரளாக பங்கேற்றனர்.
0 Comments