வியட்நாம் பெண்ணை இந்து முறைப்படி மணந்த நெல்லை இளைஞர்
திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்- வாசுகி தம்பதியினரின் மகன் மகேஷ். இவர் பிபிஏ முடித்து வியட்நாமில் உள்ள நிறுவனத்தி ல் மேலாளராக பணி செய்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் வியட்நாமை சேர்ந்த நுகின் லீ தய் என்ற பெண் மனிதவள மேலாளராக பணி செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தமிழ் முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் முதலில் வியட்நாமில் வைத்து அவர்களது முறைப்படி திருமணம் நடைபெற்றது.
பின்னர் தமிழகம் வந்த மகேஷ் மற்றும் நுகின் லீ தய் இருவருக்கும் திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ் முறைப்படி அங்கு அவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்து முறைப்படி அங்குள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.மணமகளுக்கு மணமகன் திருமாங்கல்யம் அணிவித்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண சடங்குகளை வியட்நாமிலிருந்து நுகின் லீ தய் உறவினர்கள் வீடியோ காலில் பார்த்து மகிழ்ந்தனர்.
No comments