திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் மணிபாலன் ஏற்பாட்டில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ரமேஷ்ராஜ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு 1000பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பேசிய தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் எனவும் இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி எனவும், பெண்கள் அனைவரும் தளபதிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன்,மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சி.எச் சேகர், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்புவாணன்,பொதுகுழு உறுப்பினர் குணசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் மோகன்பாபு, துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி, மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயசித்ரா சிவராஜ், ஒன்றிய செயலாளர் முரளிதரன், மனோகர். விஜயகுமார். தமிழரசன் பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் மா.தீபன்,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments