என்னுடைய பதவியை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..... நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வருங்கால முதல்வர், வருங்கால துணை முதல்வர் என எனக்கு அடைமொழிகள் போடுகிறார்கள். நான் பொறுப்பேற்று நான்கு நாட்கள் தான் ஆகிறது. என்னுடைய பதவியை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் நேற்று பாஜக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசுகையில், “இங்கே நமக்கு கிடைக்கும் வரவேற்பு எதனை காட்டுகிறது என்றால், இங்கே ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்தை காட்டுகிறது.
மேலும், போஸ்டர், பேனர்களில் அடைமொழிகள் போடும்போது கவனமாக இருக்க வேண்டும். மற்ற கட்சிகள் போல நமது கட்சியில் அடைமொழிகள் போடக்கூடாது. பாரத பிரதமர் மோடிக்கு மட்டுமே அடைமொழிகள் போடவேண்டும். வருங்கால முதல்வர், வருங்கால துணை முதல்வர் என எனக்கு அடைமொழிகள் போடுகிறார்கள். நான் பொறுப்பேற்று நான்கு நாட்கள் தான் ஆகிறது. என்னுடைய பதவியை நீங்கள் காப்பாற்ற வேண்டும்’ என்றார்.
No comments