தமிழிசை இல்லத்திற்கு சென்று குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார் அமித்ஷா
டில்லியில் இருந்து நேற்றிரவு 10:20 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்த அமித்ஷாவை மத்தியமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 11) தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழிசையை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமித்ஷா உடன் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் தமிழிசை இல்லத்திற்கு சென்றனர்.
ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று மாலை வரை தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழக பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களுடன், அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.
மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்று சந்தித்தார். அரசியல் கட்சி தலைவர்களையும் அங்கு சந்தித்துப் பேசினார்.
No comments