துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி இளைஞர்..... மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்

 


துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி மாவட்ட இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், கடையநல்லூரை சேர்ந்த செல்வ கிருஷ்ணன் என்ற இளைஞர் துபாயில் சிக்கித் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது மகனை மீட்டுத்தரக்கோரி அவரது தாய் தென்காசி ஆட்சியரிடத்தில் மனு அளித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்பாவி மக்களை ஏமாற்றும் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் துபாயில் சிக்கித் தவிக்கும் இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Post a Comment

0 Comments