• Breaking News

    பொன்னேரி திருவார்பாடியில் ஸ்ரீ கரி கிருஷ்ணப் பெருமாள் திருக்கோயில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது



    பொன்னேரி அடுத்த திருவாயற்பாடியில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. 

    கடந்த வாரம் 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நிலையில்,7ஆம் நாள் ரத உற்சவம் ஆன தேர் திருவிழா இன்று நடைபெற்றது.இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் நகர செயலாளர் ரவிக்குமார் நகர மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் இளைஞர் அணி துணை அமைப்பாளர், தீபன் ஒப்பந்தக்காரன், ஜோதீஸ்வரன் ராமலிங்கம் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் ,பலராமன், பானு பிரசாத் ,சங்கர், தமிழ்செல்வன் மற்றும் சோழவரம் மீஞ்சூர் பொன்னேரி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கங்கள் எழுப்பி நான்கு மாட வீதி வழியாக தேரை இழுத்து வந்து தரிசனம் செய்தனர்.11, ஆம்நாள் விழாவாக தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.




    No comments