• Breaking News

    பொன்னேரியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாவட்ட கழக செயலாளர் சிறுனியும் பலராமன் ஆகியோர் திறந்து வைத்தனர்

     


    திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுனியம் பலராமன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


     இதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் மோர் வெள்ளரி மற்றும் பழம் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

     பொன்னேரி பஜாரில் வணிக வளாகத்தில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது பின்னர் வண்ணிம்பாக்கம் மேட்டுப்பாளையம் தடப்பெரும்பாக்கத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் பானுபிரசாத், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், சென்னை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு அமைப்பாளர் வினோத்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராகேஷ், நகராட்சி துணை தலைவர் விஜயகுமார், வினோத் முன்னாள் கவுன்சிலர் சுமித்ராகுமார், கிஷோர் ரவி உள்ளிட்ட உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர் .



    No comments