• Breaking News

    கீழையூர் அருகே வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் வேளாண்மை குறித்த விழிப்புணர்வு


     நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவர்களான கரண், ஜீவா, துரையரசு , கௌதம், ஸ்ரீநாத், ராகேஷ் ஆகியோர் ஊரக பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக கீழையூர் வட்டாரத்தில் உள்ள மீனம்பநல்லூர் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்பம் குறித்த செயல் நிகழ்ச்சியினை நடத்தினர்.

    இதில் மண் மாதிரி சேகரிக்கும் செயல்முறை விளக்கம் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணி எனும் டிரைக்கோ டெர்மா விரிடி (பூஞ்சாணைக் கொல்லி) அதன் செயல்முறைகளையும் பயன்களையும் அக்கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர். 

    மேலும் மண்வளம் பற்றிய முக்கியத்துவத்தையும் அதனை பரிசோதனை செய்வது பற்றியும் தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

     கீழ்வேளூர் தாலுக்கா ரிப்போட்டர் த.கண்ணன்

    No comments