• Breaking News

    செங்கல்பட்டு: பட்டா மாற்ற ரூ. 8,000 லஞ்சம்..... கையும் களவுமாக சிக்கிய பெண் விஏஓ.....

     



    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அமித் குமார். இவர் பூர்விக சொத்தை பட்டா பெயர் மாற்றத்திற்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் சுதா அமித்குமாரிடம் 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

    லஞ்சம் தர விருப்பம் இல்லாத அமித்குமார் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று காலை 10:30 மணியளவில், ரசாயனம் தடவிய 8,000 ரூபாய் நோட்டுகளை அமித்குமார் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் வழங்கும்போது அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான போலீசார் சுதாவை கையும் களவுமாக பிடித்தனர்.

    தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    No comments