சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் நைடெக் நிறுவனம் இணைந்து பெரும்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிய ரக செயற்கைகோள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
அதன்படி 50க்கும் மேற்பட்ட மாணவிகள் சுமார் 40 நேரத்தில் 2 சிறிய ரக செயற்கைகோளௌ தாயரித்து அசத்தி உள்ளனர். சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை கண்காணிக்க தயாரிக்கப்பட்ட இந்த சிறிய ரக செயற்கொளுக்கு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம் பெயர் சூட்டப்பட்டது.
அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த 80 கிராம் எடை கொண்ட இந்த சிறிய செயற்கோளை பெரும்பாக்கம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் இருந்து பலூன் மற்றும் பாராசூட் மூலம் வானில் பறக்கவிட்டு தட்பவெப்பநிலை, காலநிலையை கணினி மூலம் மாணவர்கள் கண்கானித்தனர்.
வெற்றி கரமாக வானில் பறந்த இந்த சிறிய செயற்கைகோளை தயாரித்த மாணவர்களுக்கு நைடெக் நிறுவனத்தின் மேலான்மை இயக்குனர் சுதீப் மற்றும் மனிதவளமேம்பாட்டு மூத்த மேலாளர் கிருபா யோகேஸ்வரி ஆகியோர் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தனர்.
பெரும்பாக்கம் போன்ற குடிசைமாற்று வாரியத்தில் உள்ள ஏழ்மையான குழந்தைகளும் விண்வெளி குறித்து ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாக பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் திவ்யா தெரிவித்தார்.
0 Comments