• Breaking News

    தஞ்சை: கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து.... 7 ஆயிரம் கோழிகள் கருகி சாவு.....

     


    சேதுபாவாசத்திரம் அருேக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 ஆயிரம் கோழிகள் கருகி உயிரிழந்தன. இதில் 58-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசம் அடைந்தன.தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சொக்கநாதபுரம் ஊராட்சி, ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசிங்கம். இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 48).

    விவசாயியான இவர் அங்குள்ள பர்மா காலனி என்ற இடத்தில் 2 இடங்களில் கொட்டகை அமைத்து அதில் 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை இறைச்சிக்காக வளர்த்து வந்தார்.சம்பவத்தன்று மாலையில் இந்த கோழிப்பண்ணையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதில் கோழிகள் இருந்த 2 கொட்டகைகளும் முற்றிலும் எரிந்து அதில் இருந்த 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன.இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 58-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசமானது.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக கட்டுப்படுத்தினர். தீயில் எரிந்து கருகிய கோழிகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன.இந்த தீ விபத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கொட்டகை, ரூ.18 லட்சம் மதிப்பிலான பிராய்லர் கோழிகள் என ரூ.40 லட்சத்துக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்ததும் அசோக்குமார் எம்.எல்.ஏ., தீ விபத்தில் நாசமடைந்த கோழிப்பண்ணையை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மகாலட்சுமி, வீரசிங்கம் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

    No comments