திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள கொடூர் ஊராட்சி,வெள்ளோடை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கஸ்தூரி மகேந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
வரவேற்பு நடனத்துடன் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு பள்ளி உதவி ஆசிரியை சந்திரகுமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மீஞ்சூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பானுபிரசாத்,கிருஷ்ண ப்ரியா வினோத்,சமூக ஆர்வலர் நேதாஜி ஸ்ரீதர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு தேசிய அளவில் வில்வித்தையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெனிஷாஸ்ரீ, பொன்னேரி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்ற மாணவி சுவேதா, முதலமைச்சர் கோப்பை சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்த மாணவி இலக்கியா ஆகியோர் கௌரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கினர்.மேலும் பள்ளி விளையாட்டு போட்டிகளிலும்,தனித்திறன் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
அரசு தொடக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வீரசேகர்,பிரின்சஸ் சுசிலா,லிசி,தங்கவேல்,அலேக்ஸ்,சந்திரசேகர் நிகழ்ச்சிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள் மோனிகா நவீன்,யுவராஜ்,முனுசாமி,கோபி,வாசுதேவன், நந்தகுமார்,பழனி,பாஸ்கர், நிகழ்ச்சிக்கு உறுதுணையாக ஷாலினி, தேநீர் மற்றும் சிற்றுண்டி உபசரித்த மதிய உணவு திட்ட பணியாளர்கள் புஷ்பா,தேவகி வரலட்சுமி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
0 Comments