• Breaking News

    அரசு பேருந்து சக்கரம் கழன்று ஓடிய விவகாரம்..... மேலாளர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்.....

     


    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, 20க்கும் மேற்பட்ட பயணியருடன், அரசு டவுன் பஸ் ஒன்று சேலத்தை நோக்கி, நேற்று காலை புறப்பட்டது. வீரமலை ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தபோது, இடதுபுற முன்பக்க சக்கரம் தானாக கழன்று ஓடி, ஓடையில் விழுந்தது.பின், கட்டுப்பாட்டை இழந்த பஸ், 30 அடி துாரத்துக்கு இழுத்தபடி சென்றது. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோரம் நிறுத்தினார். இதனால் பயணியர் நிம்மதியடைந்தனர். அவர்கள், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவலறிந்த, அரசு போக்குவரத்து சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் விசாரித்தார். இந்த பஸ்சுக்கு கடந்த மாதம், 9ம் தேதி வீல் சர்வீஸ் செய்யப்பட்டு, 23ல் குறிப்பிட்ட இடதுபுற வீலுக்கு பேரிங் மாற்றியது தெரிந்தது.

    அதேசமயம் வாராந்திர பராமரிப்பு பணி, சோதனை ஓட்டம் நடத்தவில்லை. இதனால் டயர் கழன்றது தெரியவந்தது. எனவே, பணியில் அலட்சியம் காட்டிய ராசிபுரம் கிளை மேலாளர் துரைசாமி, இளநிலை பொறியாளர் தியாகு, போர்மேன் வெங்கடேஷ்வரன், தொழில்நுட்ப பணியாளர்கள் தர்மலிங்கம், செந்தமிழ்செல்வன், செல்வராஜ், மணிராசு என ஏழு பேரை, சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர், நேற்று மாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    No comments