• Breaking News

    டாஸ்மாக் மதுபானக்கடைகளில் 6 புதிய வகை பீர் விற்பனை



     தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பல்வேறு நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, ஒயின், ரம் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் பீர் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு ஏற்ப கடைகளுக்கு அதிக பீர் வகைகள் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 60 ஆயிரம் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை 1 லட்சம் பெட்டிகளை தாண்டியுள்ளது.

    டாஸ்மாக்கில் 35 பீர் வகைகள் விற்கப்படுகின்றன. மேலும் புதிய வகை மதுபானங்களை மக்கள் கேட்பதால் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் விற்கப்படும் 6 புதிய ரக பீர் வகைகளை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்தவகையில் தெலுங்கானா,கர்நாடகா மாநிலங்களில் விற்கப்படும் பிளாக் பஸ்டர் பீர் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ரக பீர் இப்போது அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதேபோல் கர்நாடகாவில் தயாரிக்கப்பட்ட பிளாக் போர்ட், உட்பெக்கர் லார்ஜர் ஆகிய போர் வகைகளும் டாஸ்மாக் கடைகளுக்கு வந்துவிட்டது. இதேபோல் பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர் வகைகளான உட்பெக்கர், லெகர் பிளையிங் மங்கி லெகர், ஹண்டர் சூப்பர் ஸ்டிராங் ஆகிய பீர் வகைகளும் டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

    வெளிமாநிலங்களில் இருந்து 330 மி.லி. டின் (490 மி.லி) பாட்டில் (650 மி.லி) வகைகளில் பீர் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதால் தமிழகத்தில் மதுபிரியர்கள் போட்டி போட்டு பீர் வகைகளை வாங்கி செல்கின்றனர். கோடைக்காலம் என்பதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை  படுஜோராக நடைபெற்று வருவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

    No comments