• Breaking News

    பீகாரில் மின்னல் தாக்கியதில் 61 பேர் பலி

     


    பீகாரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் மின்னல் தாக்கியதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன்படி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களில் மொத்தம் 80 பேர் இறந்துள்ளனர்.

     வருடம் தோறும் பீகாரில் இயற்கை பேரிடர்களால் 250 பேர் உயிரிழக்கிறார்கள்.இதுவரை 39 பேர் ஆலங்கட்டி மழையாலும், 22 பேர் மின்னல் தாக்குதலாலும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நாளந்தா மாவட்டத்தில் மட்டும் 23 பேர் இறந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்த மாநில முதல்வர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்ததோடு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

    No comments