விருதுநகர் அருகே கோயில் சிலை உடைப்பு..... 5 பேரிடம் போலீசார் விசாரணை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சனாபுரத்தில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த நல்லதங்காள் கோயில் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் குலதெய்வமாக உள்ள நல்லதங்காள் கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 26ம் தேதி கோயிலில் உள்ள உண்டியல், பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடு போயின. மேலும், நல்லதங்காள் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக விருதுநகர் எஸ்.பி. கண்ணன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி ராஜா தலைமையில் 3 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இரு மாதங்களுக்குப் பிறகு தற்போது 5 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.இது குறித்து போலீஸார் கூறும்போது, "நல்லதங்காள் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில், அதே பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களைப் பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில், முழுமையான விவரம் தெரிய வரும்" என்றனர்.
No comments