• Breaking News

    நீலகிரி: சிறையில் கைதியை தாக்கிய 5 போலீசார் சஸ்பெண்ட்

     





    நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளை சிறையில் சில தினங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் கூடலூரை சேர்ந்த நிஜாமுதீன் என்ற கைதி அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறை போலீசாருக்கும், கைதி நிஜாமுதீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    இதில் ஆத்திரம் அடைந்த போலீசார், கைதி நிஜாமுதீனை இரும்பு கம்பி மற்றும் லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிஜாமுதீன் கைகள் உடைந்தது. பலத்த காயத்துடன் சிறையில் தவித்து வந்த நிலையில் நிஜாமுதீன் உறவினர்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    கூடலூர் மாஜிஸ்திரேட்டு, தாசில்தார் முத்துமாரி, உதவி காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார் குழுவினர் கூடலூர் சிறையில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கைதி நிஜாமுதீனை கடுமையாக தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குழு அளித்த அறிக்கையின்படி கூடலூர் கிளை சிறைச்சாலை போலீசார் 5 பேர் துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    No comments