கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்களுக்கு தடை
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டுப் பாலம் கட்டப்பட்டு, திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு திறக்கப்பட்டது. கடலுக்கு மேலே மிதந்து செல்லும் வகையிலான தோற்றத்தைக் கொடுக்கும் இந்தக் கண்ணாடி இழைக் கூண்டுப் பாலம் திறக்கப்பட்டதிலிருந்து இதில் நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கண்ணாடி கூண்டு பாலம் ஆய்வு பணி மற்றும் பராமரிப்பு பணி வரும் 15ம்தேதி முதல் 19 ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் 5 நாட்களுக்கு கண்ணாடி பாலத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்க படமாட்டார்கள். எனவே கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இதை கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
No comments