• Breaking News

    ராமேஸ்வரம்: மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 56 கிலோ கஞ்சா பறிமுதல்

     


    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்ப உள்ளதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. செவ்வாய்கிழமை அதிகாலை, மண்டபம் அய்யனார் கடற்கரை பகுதியில் சுங்கத்துறையினர் ரோந்து சென்றனர்.

     ரோந்துப் பணியின் போது ஒரு காரிலிருந்து பார்சல்களை சிலர் கடற்கரையில் இறக்கி கொண்டிருந்தனர், அவர்கள் சுங்கத்துறையினரை பார்த்ததும் காரையும், பார்சல்களை விட்டு விட்டு தப்பி ஓடினர்.தொடர்ந்து கார், கடற்கரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த 28 பார்சல்களில் தலா 2 கிலோ வீதம் 56 கிலோ கஞ்சா இருந்தன. 

    பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், தப்பி சென்ற கடத்தல்காரர்கள் குறித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments