50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம்..... கள்ளம்புளியில் இடு காடு செல்ல ரூ.6 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை மாவட்ட கவுன்சிலர் தொடங்கி வைத்தார்


பொய்கை ஊராட்சி  கள்ளம்புளி கிராமத்தில் இடு காடு செல்ல ரூ. 6 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினை மாவட்ட கவுன்சிலர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பொய்கை ஊராட்சி கள்ளம்புளி கிராம மக்கள் சுமார் 50 ஆண்டு காலமாக அங்குள்ள இடுகாட்டிற்கு  செல்வதற்கு  மழை காலங்களில் தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கவுன்சிலரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளருமான வழக்கறிஞர் கனிமொழியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், முதற்கட்டமாக  மாவட்ட கவுன்சிலர் நிதியில் அப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டிட ரூ.6 லட்சம் நிதியினை மாவட்ட கவுன்சிலர் கனிமொழி ஒதுக்கீடு செய்திருந்தார். இதையடுத்து அப்பணி தொடக்க விழா  நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் கனிமொழி தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், ஊர் நாட்டாமை மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தங்களின் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தந்த மாவட்ட கவுன்சிலர் கனிமொழிக்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments