திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளி கூரை பெயர்ந்து விழுந்ததில் மாணவர்கள் 4 பேர் படுகாயம்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே சேகல் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அப்பகுதி மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதில், ஒரு வகுப்பறையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையும், மற்றொரு வகுப்பறையில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளும் இயங்கின.
நேற்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் படித்து வந்த வகுப்பறை கட்டட கூரையில் இருந்து காரைகள் பெயர்ந்து விழுந்தன. அப்போது வகுப்பறையில் அமர்ந்திருந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர், நான்காம் வகுப்பு மாணவர் ஒருவர் என, நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
நான்கு மாணவர்களும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஐந்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், திருவாரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments