• Breaking News

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

     


    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டதால் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இடையிடையே கோடை மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  இதற்கிடையே, வட மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது; கர்நாடகா, ராயல்சீமா பகுதிகளின் வடமேற்கில் இருந்து வரும் வறண்ட வெப்பக்காற்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களை அடைவதால், அங்கு மேலும் 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) வட மாவட்டங்களில் சில இடங்களில் கடுமையான வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக வேலூரில் 105 டிகிரியையும், சென்னை மீனம்பாக்கம் 104 டிகிரியையும் தாண்டி பதிவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    No comments