• Breaking News

    வலுக்கட்டாயமாக பணம் வசூலித்தால் இனி 3 ஆண்டுகள் சிறை..... அதிரடி ஆக்‌ஷனில் துணை முதல்வர்......

     


    தமிழ்நாட்டில் கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் பெற்றவர்களிடம் வலுக்கட்டாயமாக வசூலிக்க முயற்சிப்பதை தடுக்க புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிய மசோதாவை தாக்கல் செய்தார். புதிய சட்டத்தின்படி, வலுக்கட்டாய வசூல் மேற்கொள்வோர் மீது மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இத்தண்டனைக்கு பிணை கிடைக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வலுக்கட்டாய வசூலால் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்துகொண்டால், அந்த நிறுவனமே தற்கொலைக்கு தூண்டியதாக கருதி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடன் பெற்றவரையோ, அவர்களது குடும்பத்தினரையோ மிரட்டுவது, தொடர்ந்து தொந்தரவு செய்வது, சொத்துக்களை பறிப்பது போன்ற செயல்கள் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு மேலாக, கடன் பெற்றவர்களுக்கும், கடன் நிறுவனங்களுக்கும் இடையிலான புகார்கள் மற்றும் முரண்பாடுகளை விசாரித்து தீர்க்க, அரசு குறைதீர்ப்பு ஆணையத்தை நியமிக்கலாம் என்றும் புதிய மசோதாவில் வழிகாட்டப்பட்டுள்ளது.

    பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களை பாதுகாப்பதற்காக இம்மசோதா மிக முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.

    No comments