• Breaking News

    சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.... 3 பேர் பலி

     


    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்தனர். 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

    No comments