• Breaking News

    சென்னை: வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில்..... 2 பெண்கள் மீட்பு..... ஒருவர் கைது

     


    ஜாபர்கான் பேட்டை பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

    இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் கடந்த 16.04.2025 அன்று மதியம், ஜாபர்கான்பேட்டை, பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

    அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய வளசரவாக்கம் கனகதாரா நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கார்மெல் மகனின் ஸ்டீபன் (50) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

    விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி ஸ்டீபன் மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியதும், ஸ்டீபன் கடந்த 2024ம் ஆண்டு பாலியல் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட எதிரி ஸ்டீபன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments