அதிசயம்.... ஆனால் உண்மை..... திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கட்டப்படும் நூலகத்திற்கு காமராஜர் பெயர்..... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 


சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, திருச்சியில் சுமார் 290 கோடி ரூபாய் மதிப்பில் நூலகம் கட்டப்படுகிறது. அந்த நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். மேலும் கோயம்புத்தூர், திருச்சி நூலகப்பணிகள் அது வேகமாக நடைபெறுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்படும் திட்டங்களுக்கு கலைஞர் பெயர் தான் அதிகமாக வைக்கப்படுகிறது. ஆனால் தற்போது காமரஜர் பெயர் வைப்பது ஆச்சர்யமாக உள்ளது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments