இன்றைய ராசிபலன் 28-04-2025
மேஷம் ராசிபலன்
தேவையற்ற கவலைகளிலிருந்து உங்கள் மனதை விடுவித்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றே கவனச்சிதறலை உருவாக்கவும். இந்த நாளில் முன்னோக்கிச் செல்ல தேவையான செயல்களைச் செய்யுங்கள். அற்ப விஷயங்களில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது. மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது உங்கள் கவலையாக இருக்கக்கூடாது. உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் விடாமுயற்சியுடன் இருந்தால், சில விரைவான வெகுமதிகள் உங்களைத் தேடி வரும்!
ரிஷபம் ராசிபலன்
உங்களது வேலையில், சிறு ஓய்வு மிகவும் உதவியாக இருக்கும். இது உங்களது மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்கவும், உங்களது வேலையில் சிறப்பாக கவனம் செலுத்தவும் உதவும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களிடம் நம்பிக்கை வைப்பார். மேலும், அவர்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்து கேட்கும் போது, அவர்கள் தங்களது துயரங்களின் ஒரு பகுதியை சற்றே குறைத்துக்கொள்ளவும், இதயத்தை இலகுவாக மாற்றவும் உதவும். உங்களையும், உங்களுடைய அன்பையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாக ஏற்படுத்திக்கொள்வதற்கும், சில விஷயங்களை சீர்தூக்கி மேம்படுத்தவும், உங்களது அன்பான வார்த்தைகள் முக்கிய பங்கு வகிக்கும்.
மிதுனம் ராசிபலன்
மனஅழுத்தமானது உங்களது உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள செரிமான பிரச்சினைகள் மோசமான உணவுப் பழக்கத்தினால் எற்பட்டதல்ல. மாறாக, உங்களது மன அழுத்ததினால் ஏற்பட்டதாகும். உங்களுக்கு ஒரு கடினமான நேரத்தை அளிக்க விரும்பும் ஒரு சில நபர்கள் உள்ளனர். நீங்கள் கோவப்படுவதாக உணரும் போது, சிறிது நேரத்திற்கு அந்த இடத்தை விட்டு அகன்று, உங்கள் சொந்த நலனுக்காக வேறு ஏதாவது ஒன்றை நினைத்துப் பாருங்கள். நிறைய விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளன. உங்களது வாழ்க்கையிலிருந்து எதிர்மறை விஷயைங்களை புறந்தள்ளுங்கள். நல்ல விஷயங்கள் உங்கள் வழியில் வந்து கொண்டிருகின்றன.
கடகம் ராசிபலன்
நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருக்கு ஒன்றைச் செய்வதாக உறுதி அளிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், நீங்கள் அதை விரைவாகச் செய்ய முடியுமா என்று நினைக்கிறீர்கள், அதற்கான பதில் உங்களிடமே இருக்கிறது. ஆக்கப்பூர்வமான பணிகளை அட்டவணைப்படுத்திக் கொண்டு வேலை செய்யுங்கள், நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தைக் குறையுங்கள், இது வேதனை நிறைந்த கடந்த கால நினைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இன்று நீங்கள் சோர்வாகக் காணப்படுவதற்கு அதிகளவிலான உழைப்பே காரணமாக இருக்கிறது. பணிகளுக்கான தகவல்களைக் கவனமாகத் தெரிந்து கொள்வது, பணிகளைத் தேவையான அளவிற்குச் சிறப்பாகச் செய்வது போன்றவையே நீங்கள் அதிகளவு வேலை செய்ய தூண்டுகிறது.
சிம்மம் ராசிபலன்
தைரியமான செயல்களில் ஈடுபட வேண்டுமா? அப்படி என்றால் அதை நோக்கிச் சொல்லுங்கள், இருப்பினும் உங்கள் ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வையுங்கள். நீங்கள் சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கு முன்பு அதற்கு ஏற்ப உங்கள் மனதைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அவசரமாக எடுக்கும் முடிவுகள் எப்போதாவது வெற்றியைத் தருகின்றன என்பதை நீங்கள் இப்போது அறிந்து கொள்ள வேண்டும். ஆபத்தை உண்டாக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலகி, ஏற்கனவே முயற்சி செய்து, சோதனை செய்யப்பட்ட முறைகளைப் பின்பற்றுங்கள். இந்த முறைகளைப் பின்பற்றுவது சாதாரணமான ஒன்று என்று நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. இந்த முறைகளைப் பயன்படுத்தினால், வெற்றி சாத்தியமானதாகும் என்பதே இதன் பொருளாகும்.
கன்னி ராசிபலன்
புறங்கூறும் நபர்கள் கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று உங்களுக்குளே சொல்லிக் கொள்ளுங்கள். உங்களது அகங்காரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேளுங்கள். பணம் அல்லது பொருள் தேடும் எண்ணம் போன்றவற்றை தவிர்த்து மகிழ்ச்சியையும், அமைதியையும் தேட முயற்சி செய்யுங்கள். இன்றைக்கு உங்களது அன்புக்குரியவர்களுக்கு கொஞ்சம் அன்பைக் காட்டுங்கள். உங்களை வலுவிழக்கவும், உங்கள் கவனத்தை சிதறச்செய்யும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும். இது கசப்பான உறவுகள், சுயநலமிக்க நண்பர்கள் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளால் கூட இருக்கலாம்.
துலாம் ராசிபலன்
இன்னும் கொஞ்சம் தைரியமாக இருப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முன் இருக்கும் சவால்களைத் தாண்டி, நீங்கள் முன்னேற வேண்டும். நீங்கள் உங்களை ஓய்வில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்று உங்களைத் புதியதாகக் கவர்ந்தால், அதில் வெற்றிபெற முடியாது என நீங்கள் உணரும் போது, அதனை செய்வதை கைவிடுங்கள். தைரியமான முடிவுகளும் மற்றும் சில விஷயங்களில் புதிய அணுகுமுறைகளும் உங்களுக்குத் தேவையானவைகள் ஆகும்.
விருச்சிகம் ராசிபலன்
கடந்த காலத்தில் நடந்தவை அல்லது எதிர்மறையான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள பலவீனமான எண்ணங்களை ஒதுக்கி விட்டு, வாழ்க்கைக்குப் பயனளிக்கும் நல்ல காரியங்களைச் செய்யுங்கள். உங்களது உணர்ச்சிகள் மற்றும் ரகசியங்களை மற்றவர்களை நம்பி கூறுவதற்கான நாள் இது இல்லை. திடீரென உங்கள் இதயம் உடைந்து போகலாம், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் உங்களுடன் இருந்தால், அவர்கள் உங்களுக்கு அதிகளவிலான மகிழ்ச்சியை அளிப்பார்கள்.
தனுசு ராசிபலன்
உங்கள் உணர்வுகள் கட்டுப்பாடில்லாமல் இயங்குகின்றன. மேலும், நீங்கள் இதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். மனஅழுத்தம் என்பது உங்கள் சக்தியை பெருமளவில் வீணடிக்கும் ஒரு நிலை ஆகும். உங்கள் நிலையினை தாழ்த்தும் செயல்களை வேறுபடுத்தி, அதனை புரிந்துகொள்ளுங்கள். இது கடந்த காலங்களில், நீங்கள் மற்றவர்களுக்கு செய்த தவறுகள், அல்லது ஏமாற்றம் சார்ந்தவையாகக் கூட இருக்கலாம். அத்தகைய சிக்கல்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நீங்கள் கண்டறியுங்கள்.
மகரம் ராசிபலன்
உங்களின் செயலற்ற மனமானது, பின்னாளில் உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பயனுள்ள செயல்கள் மூலம் உங்களை நீங்கள் சுறுசுறுப்பாக வைத்திருங்கள். குழப்பமான சிந்தனைகளில் உங்கள் மனதை அலைபாய விடாதீர்கள். உங்களது தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை ஓரமாக வைத்துவிட்டு, இருப்பதை அனுபவியுங்கள். சில குறுகியகால பயணங்கள் வரும்நாட்களில் உங்களுக்காக காத்திருக்கின்றன. தூய்மையான காற்று மற்றும் சூழல் சார்ந்த காட்சிகள் மாறும்போது, நீங்கள் உண்மையிலேயே அவற்றால் பயன்பெறலாம். எனவே, அதிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டாம்.
கும்பம் ராசிபலன்
கடந்த நிகழ்ந்த விஷயங்கள் சீராக இல்லாமல் இருக்கலாம். உங்களை விடக் கடினமான காலங்களில் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை எண்ணி நேர்மறையாகச் செயல்படுங்கள். விரைவில் உங்களைக் கஷ்டத்தில் ஆழ்த்தும் விஷயங்கள் மாறும். உங்கள் பலம் மற்றும் உங்கள் சமூக திறன்கள் புதிய வாய்ப்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். அடுத்த சில நாட்களில் பயணங்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு நிறைய இடம் உள்ளது. உங்களைப் புத்துயிர் பெறச் செய்ய இது ஒரு நல்ல நேரம்.
மீனம் ராசிபலன்
உங்கள் நரம்புகள் அனைத்தும் இன்று உறுதியாகவும், முறுக்கேறியும் இருக்கின்றன. ஆனால், அமைதியாக இருங்கள். அதிகமாகச் செயல்பட வேண்டாம். முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். சற்று சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி நீங்கள் பயப்படும் போது, அந்த விஷயங்களை நீங்கள் வெறுக்கத் தொடங்குவீர்கள். அந்த பயத்தை உள்ளே வைத்திராமல், வெளியே காட்டி விட்டால் நல்லது. உங்கள் கவலைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது உங்கள் மனதில் உள்ள நிறைய அழுத்தங்களை வெளியேற்றி விடும்.
No comments