• Breaking News

    குரோம்பேட்டை: இந்து திராவிட மக்கள் கட்சி சார்பில் காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகளால் சுட்டு கொன்றதை கண்டித்தும், இறந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர்


    சென்னை அடுத்த குரோம்பேட்டை நாகப்பா நகர் பகுதியில் இந்து திராவிட மக்கள் கட்சி சார்பில் தேசிய தலைவர் ரமேஷ்பாபுஜி தலைமையில் காஷ்மீர் பகல்காம் சுற்றுலா பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் 26 பேரை கண்மூடித்தனமாக, கொடூரமான முறையில் சுட்டுகொன்றதை கண்டித்தும், இறந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செய்து வீரவணக்கம் செலுத்தினர். இது குறித்து தேசிய தலைவர் ரமேஷ்பாபுஜி பேசுகையில் காஷ்மீரில் தொடர்ந்து அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லபட்டு வருகின்றனர். 

    இவர்கள் மீது இந்திய அரசாங்கம் தயவு தாட்சனை பாராமல் போர்தொடுக்க வேண்டும் எனவும் காஷ்மீர் மாநிலம்  இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளதை தளர்த்தில் இறந்த ஓவ்வொருவருக்கும் 1 கோடி ரூபாய் தருமாறு கோரிக்கை வடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இந்து திராவிட மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செய்து வீரவணக்கம் செலுத்தினர்.

    No comments