2026ல் செல்வப்பெருந்தகை துணைமுதல்வர்..... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்.....
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 2026ல் தமிழகத்தின் துணை முதலமைச்சர் என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளன.
‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என முழக்கமிட்ட விசிகவின் குரல் சற்று ஓய்ந்த நிலையில், இப்போது காங்கிரஸ் அந்த முழக்கத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள், சென்னை மாநகரம் முழுவதும் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
செல்வப்பெருந்தகையின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகரில் காங்கிரஸார் ஒட்டியிருக்கும் போஸ்டரில், "2026-ன் துணை முதல்வரே” என செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த கவிஞர் கா.மு.ஷெரிப்பீன் பேரனும் காங்கிரஸ் மாநில செயலாளருமான கவி. கா.மு. AVM ஷெரிப் பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்களால் இப்போது பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
No comments