• Breaking News

    செங்கல்பட்டு: மண்ணிவாக்கம் ஊராட்சியில் மாற்று கட்சியிலிருந்து விலகி சுமார் 20 மேற்பட்டோர் திமுகவின் இணைத்துக் கொண்டனர்


    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் தலைமையில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி.லோகநாதன் அவர்களின் முன்னிலையில்  புரட்சி பாரத மாவட்ட துணை அமைப்பாளர் பிரபு, மண்ணிவாக்கம் ஊராட்சி 4வது வார்டு உறுப்பினர் உஷா பிரபு மற்றும் மண்ணிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சந்திரன், கோபிகேஸ், நிஷாந்த் அமர்நாத், கிருபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒன்றிய துணை செயலாளர் வே.லோகநாதன் உள்ளிட்ட சுமார் 20க்கு மேற்பட்டோர் திமுகவில் இணைத்துக் கொண்டனர் பின்னர் மாற்று கட்சியிலிருந்து வருகை தந்த நிர்வாகிகளை பொன்னாடை போற்றி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

     இதில் ஒன்றிய துணை செயலாளர் மா.வே. பொன்னுசாமி, ஒன்றிய இளைஞர்  அணி துணை அமைப்பாளர் எம்எஸ்.கார்த்திக், ஒன்றிய குழு உறுப்பினர் வி.சோமசுந்தரம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி லோகநாதன், கிளைக் கழக செயலாளர் அண்ணாதுரை, கே.வி.குமார், மதன்,  1வது வார்டு உறுப்பினர் விமல், 9வது வார்டு உறுப்பினர் தெய்வசிகாமணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    No comments