பைக் மீது கவிழ்ந்த லாரி.... 2 குழந்தைகள் உட்பட 3 பேர் நசுங்கி பலி
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோவில் திருமாளம் பகுதியில் இன்று காலை ஒரு கனரக லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாய்ந்ததில் ஒரு பைக் அடியில் சிக்கிக்கொண்டது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
இந்த விபத்து குறித்து போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments