• Breaking News

    பொன்னேரி: பெருஞ்சேரியில் நாளை 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கும் முதலமைச்சர்..... விழாவிற்கான இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர் சா.மு.நாசர், ஆட்சியர் பிரதாப், ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு.....




    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் வருகின்ற 18ஆம் தேதி மாவட்ட வருவாய் துறை சார்பில் ஒருலட்சம் பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    இதனை சிறுபான்மை நலன்மற்றும்அயலகதமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் பிரதாப், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் நேரில் ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

     மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், மாநில நிர்வாகிகள் சி.எச்.சேகர், அன்புவாணன், பாஸ்கர்சுந்தரம்,  மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி கதிரவன்.ஜெ. மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன் ஒன்றியசெயலாளர்கள் நா.செல்வசேகரன், கி. வே.ஆனந்தகுமார், கா.சு ஜெகதீசன் எம்.முரளிதரன்.ந. பரிமளம் பொன்னேரி நகரசெயலாளர்கள் ஜி.ரவிக்குமார், ஆரணி முத்து. நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், பா.து. தமிழரசன், நா.மோகன்ராஜ், மா.தீபன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments