கீழையூர்: திருமணங்குடியில் உள்ள திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு விழா நிகழ்வில் தனியார் அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான இலவச காலணிகள் வழங்கப்பட்டன
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடியில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி.நாகை மாலி மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் ஏ.தாமஸ்ஆல்வா எடிசன், கீழையூர் வட்டார கல்வி அலுவலர் தை. லீனஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டனஅதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக திருச்சி மஹாமாயா அறக்கட்டளையின் சார்பில் பள்ளியில் கல்வி பயிலும் 182 மாணவ மாணவியருக்கு சுமார் 1 இலட்சம் மதிப்பிலான இலவச காலணிகள் வழங்கப்பட்டன.
கீழையூர் முன்னாள் ஊராட்சி தலைவர் இராமச்சந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் குமாரசெல்வம், திருச்சி ஸ்ரீ மஹாமாயா அறக்கட்டளை நிர்வாகிகள் நா.சிவசங்கர் மற்றும் கோவிந்தராஜலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் இரா. வெங்கடாசலம் வரவேற்றார்.
நிறைவாக பள்ளி செயலர் திருஞானசம்மந்தம் நன்றி கூறினார். நிகழ்வைப் பள்ளி ஆசிரியர் தி. ஜவகர் ஒருங்கிணைத்தார்.
No comments