9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன்- ஜூலையில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று வெளியிட்டது. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி ஜூன் 5-ந்தேதி கோவையில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, கோவை கிங்சை சந்திக்கிறது. அதே மைதானத்தில் ஜூன் 6-ந்தேதி நடக்கும் 2-வது லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்சுடன் மோதுகிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் நத்தம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. மகுடத்துக்கான இறுதிப்போட்டி ஜூலை 6-ந்தேதி திண்டுக்கல்லில் அரங்கேறுகிறது.
0 Comments