டீசல் பேருந்துகளை CNG பேருந்துகளாக மாற்ற தமிழக போக்குவரத்துத்துறை முடிவு
தமிழக அரசு டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 1000 அரசு பேருந்துகளை CNG பேருந்துகளாக மாற்ற போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அதன்படி 8 லட்சம் கிலோ மீட்டர் குறைவாக இயக்கப்பட்ட பேருந்துகள் மற்றும்ஆறு முதல் ஏழு வருடங்களுக்குள் வாங்கப்பட்ட பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற முடிவு செய்துள்ளனர்.மேலும் டீசல் பயன்பாட்டை குறைத்து செலவுகளை மிச்சப்படுத்தும் நோக்கில் அரசு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments