திமுக அரசை கண்டித்து பஜனை பாடி BMS அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக அரசை கண்டித்து பஜனை பாடியபடி BMS அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாததை கண்டித்தும், ஒப்பந்த அடிப்படையில் ஒட்டுனர், நடத்துனர்களை நியமனம் செய்வதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது என அவர்கள் பஜனை பாடியபடியே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments