பிரதமர் மோடியை சந்தித்து அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன..?

 

கோப்பு படம்

பாமக தலைவர் அன்புமணியும், அவரது மனைவி செளமியாவும் நேற்று முன்தினம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் சித்திரை திருவிழாவை சென்னை மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நடத்துவது பாமகவின் வழக்கம்.அந்த வகையில், கடந்த 2013-ல் நடந்த விழாவின் போது மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து கடந்த 12 வருடங்களாக சித்திரைத் திருவிழாவை டாக்டர் ராமதாஸ் நடத்தவில்லை. இந்த வருடம் நடத்த திட்டமிட்டுள்ளார். 

இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.விழாவில் வட இந்திய பிற்படுத்தப்பட்டோர் அரசியல் தலைவர்களை கலந்து கொள்ள வைக்க ராமதாஸ் விரும்பினார். அதற்காக, வட இந்திய அரசியல் தலைவர்களை அழைப்பதற்காக டாக்டர் அன்புமணியும் அவரது மனைவியும் டெல்லிக்குச் சென்றுள்ளனர். முதல் முதலாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். அப்போது, பாமக நடத்தும் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்ள மோடியை அழைத்துள்ளனர்.அதற்கான அழைப்பிதழையும் கொடுத்துள்ளனர். அதனைப் பார்த்த பிரதமர் மோடி, சித்திரைத் திருவிழா குறித்த விபரங்களை அன்புமணியிடம் விரிவாக கேட்டறிந்துள்ளார். 

அதேசமயம், நேரம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விட்டுச் சொல்வதாக அவர்களிடம் தெரிவித்துள்ளார் பிரதமர். மோடியைத் தொடர்ந்து, ராஜ்நாத்சிங், யோகி ஆதித்யநாத், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களையும் அழைக்கவிருக்கிறார். மேலும், மோடியுடன் இந்த சந்திப்பில், சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் தொடங்கவேண்டும் என்பதை மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், இந்த கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் பாஜகவுக்கும் ஏற்படும் அரசியல் நன்மைகளையும் விவரித்திருக்கிறாராம் டாக்டர் அன்புமணி.

கடந்த வாரம்தான் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

அமித் ஷா - எடப்பாடி நடத்திய மீட்டிங்கில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கேட்கப்படாது. இதற்கான அழுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படாது. அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் . அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்.. செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே பெரிய தலை ஒருவரை செங்கோட்டையன் சந்தித்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவரை செங்கோட்டையன் சந்தித்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடி - அமித் ஷா சந்திப்பு காரணமாக தனக்கு ஏற்பட்ட "சில நெருக்கடி" தொடர்பாக செங்கோட்டையன் அந்த டெல்லி புள்ளியிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு ஏற்பட சில பிரச்சனைகள் பற்றி இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த சந்திப்பிற்கு பின் என்ன நடக்கும்.. என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments