தமிழகத்தில் மத்திய பாஜக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருமே இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்கிறார்கள். பாஜகவை தவிர பெரும்பாலான தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரு மொழிக் கொள்கைக்கு தான் ஆதரவு கொடுக்கிறார்கள். இந்த நிலையில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் பாஜகவினர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே கையெழுத்து வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு கொடுத்து பாஜக கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து போட்டார். மேலும் இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி அவரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
0 Comments