அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்த துண்டு பிரச்சாரங்களை கழக செய்தி தொடர்பாளர் பொன்னையன் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் வழங்கினர்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூர் கழகம் சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ் டி டி ரவி ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி பஜாரி துண்டு பிரசுரங்கள் மற்றும் திண்ணை பிரச்சாரம் வழங்கும் பணி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும் கழக செய்தி தொடர்பாளமான பொன்னையன் கலந்து கொண்டு கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கடைகளுக்கு நேரடியாக சென்று பொருட்களை வாங்கி அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் திமுக ஆட்சியின் அவல நிலையை எடுத்துரைக்கும் துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்.
பின்னர் கும்மிடிப்பூண்டி அடுத்த ஓடை பகுதியில் வீடு வீடாகச் சென்று தாய்மார்களுடன் திண்ணையில் அமர்ந்து கழக ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்களும் மற்றும் தற்போது இந்த ஆட்சியில் நடைபெறும் அவல நிலையை பொதுமக்கள் மத்தியில் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு அம்மா பேரவை இனைசெயலாளர் முல்லைவேந்தன் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் மகேந்திரன் மாவட்ட துணை செயலாளர் எஸ் எம் ஸ்ரீதர்.சியாமளா தன்ராஜ் மற்றும் கே எம் எஸ் சிவகுமார் மு க சேகர் இமயம் மனோஜ். ஓடை ராஜேந்திரன் புல்லட் கோவிந்தராஜ் 3.வது வார்டு செயலாளர் மோகன் எம்எஸ்எஸ் வேலு மஜித் தொழிற்சங்கம் மோகன். கோபி. சாந்தி. சுசீலா.உள்ளிட்ட பேரூர் மாவட்ட ஒன்றிய.கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments