• Breaking News

    செருப்பை பற்றி பேசிய செந்தில் பாலாஜி..... செருப்படி பதில் கொடுத்த அண்ணாமலை.....


     பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என்று சபதம் எடுத்திருந்த நிலையில் இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார். அதாவது கோவை எப்போதுமே பெரியார் மண் திராவிட மண் என்பதை மக்கள் நிரூபித்துக் காட்டினர்.

     கோயம்புத்தூரில் ஒரு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டால் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறலாம் என்று நினைத்தார்கள். ஆனால் சட்டசபை தேர்தலில் உள்ளூரில் விலை போகாத ஒரு ஆடு நாடாளுமன்ற தேர்தலில் வெளியூர் சந்தைக்கு வந்து விலை போகுமா என்று வந்தார்கள். தம்பி இந்த ஊரும் பெரியார் மண் தான். உங்களுக்கு உள்ளூரிலும் வேலையில்லை வெளியூரிலும் வேலை இல்லை. உலகத்தில் நான் தான் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொண்டு நாட்டு மக்கள் அடிப்பதற்கு முன்பாக தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.

    இனி செருப்பு போட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எப்போதுமே திராவிடம் மாடல் ஆட்சி தான் நடக்கும் இனி வாழ்நாள் முழுவதும் செருப்பு போட முடியாது என்று கூறினார். இதற்கு அண்ணாமலை ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நான் செப்பல் போடாமல் தான் இருக்கிறேன். வேலை வாங்கி தருவதாக கூறி யாரையும் ஏமாற்றிவிட்டு ஜெயிலுக்கு போகவில்லை. ஜெயிலுக்கு செல்வதும் மீண்டும் அமைச்சர் பதவியில் அமர்வதும் தான் தவறு. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பாஜகவினரை விமர்சிப்பதை தான் திமுக தங்களுடைய முழு நேர வேலையாக கொண்டுள்ளது என்று கூறினார்.

    No comments